நட்டமடைவது எப்படி என்று கற்றுக்கொள்ளுங்கள்.

இது தான் உங்களை தின வர்த்தகத்தில் லாபகரமாக வைத்திருக்கும்.

பொதுவாக சந்தைக்குள் நுழையும் பொழுது அனைவரும் வர்த்தகம் என்றால் வாங்குதல் மற்றும் விற்றல் என்று தான் நினைக்கிறார்கள். அதன் விளைவாக வாங்குவது மற்றும் விற்பது ஆகிய இரண்டில் மட்டுமே பெரும்பாலான மக்கள் தங்கள் கவனத்தை செலுத்துகின்றனர்.

அது முற்றிலும் தவறான வழி. வர்த்தகத்தில் வாங்குவது மற்றும் விற்பது ஒரு வர்த்தகரின் வெற்றியில் 20% பகுதி மட்டுமே. 80% வெற்றியை தீர்மானிப்பது இடர் மேலாண்மை மற்றும் பண மேலாண்மை தான். தவறான இடத்தில் கவனம் செலுத்துவதனாலேயே பெரும்பாலானோர் வர்த்தகத்தில் லாபம் அடைய முடிவதில்லை.

கடந்த 36 நாட்களாக நான் செய்த வர்த்தகத்தில் என்னுடைய வெற்றி சதவீதம் 53.40% தோல்வி சதவீதம் 46.51%. அதாவது நான் 10 வர்த்தகம் செய்தால் சராசரியாக 5-ல் தோல்வியும் 5-ல் வெற்றியும் பெறுகிறேன். இந்த எண்களை பார்த்வவுடன் பெருபாலானோர் நான் நட்டத்தில் உள்ளதாக கருதி விடுவார்கள். இந்த கருத்து அவர்களுக்கு வர காரணம் அவர்கள் வாங்குவது மற்றும் விற்பதில் கவனம் செலுத்துவதாலேயே.

இந்த வெற்றி தோல்வி சதவீதத்தை தனியாக பார்க்கக்கூடாது. வெற்றியடையும் பொழுது நான் எவ்வளவு பணம் ஈட்டுகிறேன் தோல்வியடையும் பொழுது எவ்வளவு பணத்தை இழக்கிறேன் என்பதை சேர்த்து பார்க்க வேண்டும்.

நான் கடந்த 36 நாட்களாக செய்த வர்த்தகத்தில் சராசரியாக 1 வெற்றியடையும் வர்த்தகத்தில் ரூ.8440-ம் வெற்றியும் தோல்வியடையும் வர்த்தகத்தில் சராசரியாக ரூ.1739-ம் இலக்கிறேன்.

வெறும் 53 சதவீத வெற்றியைக் கொண்டு 36 நாட்களில் முதலீடு செய்த பணத்தில் 159.50% சதவீதம் லாபத்தை பெற்றுள்ளேன்.

பங்குச்சந்தையில் 10-ற்கு 6-ல் வெற்றிகண்டால் அது மிக பெரும் விடயம். யாரும் 10-ற்கு 9-ல் வெற்றி காண முடியாது – பீட்டர் லிஞ்ச்

36 நாட்களின் எனது வர்த்தகத்தின் செயல் திறன் அறிக்கை.

வர்த்தகம் என்பது ஒரு நிகழ்தகவு(probability) விளையாட்டு. அந்த நிகழ்தகவு நமக்கு அனுகூலம் அளிக்கும் படி ஒரு வர்த்தக யுக்தியை பயன்படுத்தினால் வர்த்தகத்தில் நீங்கள் பெரும் பணம் ஈட்டலாம்.

இந்த அறிக்கையில் நீங்கள் காணலாம் ஒரு வர்த்தகத்தில் நான் அதிகமாக இழந்தது ரூ. 2037.85 தான். ஆனால் ஒரு வர்த்தகத்தில் நான் அதிகபட்சமாக சம்பாரித்தது ரூ. 32289.75. இதிலிருந்து நான் கூற வருவது என்னவென்றால் தோல்வி அடையும் பொழுது சிறியதாகவும் வெற்றி பெரும் பொழுது பெரியதாகவும் இருக்க வேண்டும் என்பதே.

ஒரு வர்த்தகத்தை எடுப்பது(உள்நுழைவது) முக்கியமல்ல. பெரும் பணம் எப்பொழுதும் உள்நுழைவதால்(Entry) வருவதில்லை. வெற்றி பெரும் வர்த்தகத்தை எவ்வளவு தூரம் கொண்டு செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் கொண்டு செல்ல வேண்டும். தோல்வியடையும் வர்த்தகத்தில் எவ்வளவு வேகமாக வேகமாக வெளிவர முடியுமோ அவ்வளவு வேகமாக வெளி வர வேண்டும்.

தின வர்த்தகத்தில் வெற்றி பெற

  • நட்டமடைவது எப்படி என்று கற்றுக்கொள்ளுங்கள்.
  • இடர் மேலாண்மையின் முக்க்கியத்துவதை அறிந்துக்கொள்ளுங்கள். இது தெரியாமல் வர்த்தகத்தில் வெற்றி பெற முடியாது.
  • வெற்றி தோல்வி சதவீதத்தை மற்றும் பார்த்து இடை போடாதீர்கள்.
  • பெரும் பணம் எப்பொழுதும் வெற்றியடையும் வர்த்தகத்தை எவ்வளவு தூரம் கொண்டு செல்கிறோம் என்பதில் தான் உள்ளது. அதாவது வெளிவருதலில்(Exit) தான் உள்ளது.
  • நல்ல வர்த்தக திட்டமொன்று வேண்டும். பின்னர் அந்த திட்டத்தை இம்மி பிசகாமல் கடைபிடித்தல் வேண்டும்.
  • ஒரு தொழில் முறை வர்த்தகர் தற்போதைய வர்த்தகத்தில் என்ன நடக்கிறது என்பதை பற்றி கவலைப்பட மாட்டார். 100 அல்லது 1000 வர்த்தகத்தில் என்ன நடக்கும் என்பதை பற்றி மட்டுமே சிந்திப்பார்.
  • ஒரு தொழில் முறை வர்த்தகர் எப்பொழுதும் சந்தையை கணிக்க மாட்டார் மாறாக நிகழ்தகவை(probability) தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வார்.
  • ஒரு தொழில் முறை வர்த்தகர் உணர்ச்சிபூர்வமாக வர்த்தகத்தை எடுக்க மாட்டார். அவரது திட்டத்தின் படி தான் வர்த்தகத்தை எடுப்பார். இதற்கு முதலில் ஒரு திட்டம் வேண்டும்.
  • ஒரு தொழில் முறை வர்த்தகர் அனைத்து வர்த்தகத்திலும் லாபம் ஈட்ட வேண்டுமென என்ன மாட்டார். அவருக்கு அனைத்தும் நிகழ்தகவே.
  • ஒரு தொழில் முறை வர்த்தகர் இழப்புகளை எண்ணி கவலைப்பட மாட்டார். அதுவும் வர்த்தகத்தின் ஒரு பகுதி என்பதை அவர் அறிந்திருப்பர்.

வர்த்தகம் என்பது மிகவும் எளிது. ஒரு நல்ல லாப காரணி உள்ள ஒரு வர்த்தக திட்டத்தை வடிவமைத்து அதை எந்த உணர்ச்சிகளுமின்றி கடைபிடித்தால் நீங்கள் பணக்காரனாவதை யாராலும் தடுக்க முடியாது.